கே.வி.குப்பம் தாலுகா மாளியப்பட்டு கிராமத்தில் ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டும்பணி நடந்து வருகிறது. இதன் அருகில், பல ஆண்டுகளாக வாகனங்கள் செல்ல பொதுவழியாகப் பயன்படுத்தப்பட்டு வந்த ஒரு பகுதியில் திடீரெனக் கம்பிவேலி அமைத்து ஆக்கிரமித்துள்ளார்கள். இதை அகற்றி வழக்கம்போல் போக்குவரத்துக்கு வழி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கோ.பாலகோபால், மாளியப்பட்டு.