வேலூர் கோட்டை வளாகத்தில் நாகாத்தம்மன் கோவில் செல்லும் வழியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. அந்த நடைபாதையின் கற்கள் உடைந்து சேதமாகி பள்ளம் ஏற்பட்டுள்ளது. ஏராளமான பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அவ்வழியாக செல்வதால் நடப்பதற்கு சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-காளிதாஸ், வேலூர்.