ஆரணி தாலுகா எஸ்.யூ.வனம் கிராமம் சின்ன ஏரிக்கரை செல்லும் சாலை போடப்பட்டு 15 ஆண்டுகள் ஆகிறது. சாலையின் இருபக்கமும் புதர்கள் சூழ்ந்துள்ளது. சாலை குண்டும் குழியுமாக உள்ளது. அந்தப் பகுதியில் வசிக்கும் 100 குடும்பங்களை சேர்ந்தவர்கள் இந்தச் சாலையை தான் பயன்படுத்தி வருகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாலையை சரி செய்ய வேண்டும்.
-ராஜா, எஸ்.யூ.வனம்.