வேலூர் அலுமேலுமங்காபுரம் அழகிரி நகர் பகுதியில் புதிதாக தார் சாலை போட்டார்கள். ஆனால், சாலையோரம் குடிநீர் குழாய்கள் உள்ளன. சாலைபோடும் பணியின் போது அவைகள் உடைந்து விட்டன. அதை கவனிக்காமலும், குடிநீர் குழாயை சரி செய்யாமலும் புதிய தார் சாலையை போட்டுள்ளனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குழாய்களை சரி செய்து கொடுக்க வேண்டும்.
-துருவன், அலுமேலுமங்காபுரம்.