வாணியம்பாடி முதல் திருப்பத்தூர் வழியாக ஊத்தங்கரை வரை நான்கு வழி தேசிய நெடுஞ்சாலையாக மாற்றப்பட்டுள்ளது. திருப்பத்தூர் நகரில் தேசிய நெடுஞ்சாலை முழுவதும் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், ஒரு தனியார் பெட்ரோல் பங்குக்காக ஏராளமான இடம் ஒதுக்கப்பட்டு, தடுப்புகள் இல்லாமல் விட்டுள்ளனர். தாலுகா அலுவலகம், தீயணைப்புத்துறை, நகராட்சி அலுவலகத்துக்கு செல்லும் வழிகள் மூடப்பட்டுள்ளன. சாலையில் தடுப்புகள் அமைக்காமல் இடைவெளி விட்டுள்ள பகுதியில் தினமும் வாகன விபத்துகள் நடக்கின்றன. சாலையில் வாகனங்கள் வளைந்து செல்லும் இடங்களில் தடுப்புகள் அமைக்க வேண்டும்.
-இ.அய்யப்பன், கவுன்சிலர், திருப்பத்தூர் நகராட்சி.