திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் ஒன்றியம் வழுதலங்குணம் ஊராட்சி முதல் மங்கலம் வரை செல்லும் சாலை 75 ஆண்டுகளாக மண் சாலையாக உள்ளது. தற்போது மழைப் பெய்து வருவதால் சாலை மோசமான நிலையில் உள்ளது. அந்தச் சாலையில் நடந்து கூட செல்ல முடியாது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எங்கள் பகுதிக்கு வந்து பார்வையிட்டு சாலையை தார் சாலையாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-வி.எல்.சரவணன், சமூக ஆர்வலர், வழுதலங்குணம்.