திருப்பத்தூர்-புதுப்பேட்டை சாலையில் இருந்து திருப்பத்தூரில் உள்ள தனியார் குளிர்பான தொழிற்சாலைப் பகுதிக்குச் செல்லும் சாலை பழுதடைந்து மோசமான நிலையில் உள்ளது. அந்தப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். எனவே அந்தச் சாலையைச் சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சேதுராமன், திருப்பத்தூர்.