வேகத்தடை அமைக்க வேண்டும்

Update: 2024-09-29 20:26 GMT

குனிச்சி அருகே பெரிய கண்ணாலப்பட்டி பகுதியில் செயல்பட்டு வரும் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஏராளமான மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர். அந்தப் பள்ளி முன்பு செல்லும் திருப்பத்தூர்-தர்மபுரி சாலையில் வேகமாக வாகனங்கள் செல்கின்றன. இவற்றால் விபத்துகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே பள்ளி முன்பு வேகத்தடை அமைக்க வேண்டும்.

-நெடுஞ்செழியன், குனிச்சி.

மேலும் செய்திகள்

சாலை பழுது