ஆபத்தான பள்ளம்

Update: 2023-07-16 16:55 GMT

வேலூர் காகிதப்பட்டறை-ஆற்காடு சாலையில் பாதாள சாக்கடை திட்டப்பணிகளுக்காக பள்ளம் தோண்டப்பட்டு மூடப்பட்டது. அதன் மேல் பகுதியில் சாலை அமைப்பதற்காக ஜல்லிக்கற்கள் பரப்பினர். இந்த நிலையில் பலத்த மழையால் ஜல்லிக்கற்கள் பரப்பிய இடத்தில் நீண்ட தூரத்துக்கு பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு விபத்து ஏற்படும் சூழ்நிலை உள்ளது. மாவட்ட நிர்வாகம் இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து சாலை பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சுந்தரம், வேலூர்.

மேலும் செய்திகள்

சாலை வசதி