ஆரணி தாலுகா அக்ராபாளையம் கிராமத்தில் 20 ஆண்டுகளுக்கு முன்பு அனைத்துத் தெருக்களிலும் போடப்பட்ட சிமெண்டு சாலை தற்போது சேதம் அடைந்து ஆங்காங்கே மேடும், பள்ளமுமாக உள்ளது. சேதம் அடைந்த தெருக்களில் கடந்த சில நாட்களுக்கு முன்பு முரம்பு மண் கொட்டப்பட்டது. தற்போது பெய்து வரும் மழையால் முரம்பு மண் சேறும் சகதியுமாக மாறி உழவடித்த சாலையாக மாறி விட்டது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து அனைத்துத் தெருக்களிலும் மீண்டும் சிமெண்டு சாலைஅமைக்க வேண்டும்.
ஆ.கண்ணதாசன், அக்ராபாளையம்.