அரக்கோணம் ஒன்றியம் பெருமுச்சி ஊராட்சிக்கு உட்பட்ட வெங்கடேசபுரம் பெருமாள் கோவில் தெரு பல மாதங்களாக குண்டும் குழியுமாக உள்ளது. மழைப் பெய்யும்போது சாலையில் மழைநீர் தேங்குகிறது. பள்ளி செல்லும் மாணவ-மாணவிகள், வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி குழிகளில் விழுந்து செல்கின்றனர். சாலையை சரி செய்ய வேண்டி பல முறை ஊராட்சியில் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே மாவட்ட நிர்வாகம் சாலையைச் சீர் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சண்முகம், வெங்கடேசபுரம்.