காட்பாடி திருநகர் பகுதியில் விவேகானந்தா தெரு சாலை உள்பட பல்வேறு தெருக்களின் சாலைகள் முற்றிலும் சேதம் அடைந்து குண்டும் குழியுமாக உள்ளன. தற்போது பெய்து வரும் மழையால் பள்ளங்களில் மழைநீர் தேங்கி குட்டை போல் காட்சி அளிக்கிறது. எனவே இதுபோன்ற நிலையை மாற்ற திருநகர் பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் தார் சாலை அல்லது சிமெண்டு சாலை அமைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சரவணன், காட்பாடி.