மேடு பள்ளங்களாக உள்ள சாலை

Update: 2022-08-03 11:38 GMT

திருவண்ணாமலை ஒன்றியத்தில் உள்ள ஊராட்சிகளில் பெரிய ஊராட்சி வேங்கிக்கால் ஊராட்சியாகும். வேங்கிகால் புதூர் பகுதியில் உள்ள பெரும்பாலான சாலைகள் குண்டும், குழியுமாக மேடும் பள்ளமாக காட்சியளிக்கிறது. கடந்த சில தினங்களாக பெய்து வரும் மழையின் காரணத்தினால் சாலையில் மழை நீர் தேங்கி சேரும் சகதியுமாக மாறி மக்களால் நடந்து செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. இது குறித்து பலமுறை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. கலெக்டர் அலுவலகம் உள்ளிட்ட முக்கிய அலுவலகங்கள் வேங்கிகால் ஊராட்சி பகுதியில் இருந்தும் மக்களுக்கு தேவையான முக்கிய அடிப்படை வசதிகள் கிடைக்கவில்லை. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராஜா, திருவண்ணாமலை.

மேலும் செய்திகள்