வேலூர் மாநகராட்சி கழிஞ்சூர் பகுதியில் இருந்து வஞ்சூர் ரெயில்வே கேட் வரையிலான பாதாள சாக்கடை திட்டம் 2 வருடங்களுக்கு மேலாக நடந்து கொண்டிருக்கிறது. வேலை ஆரம்பித்தபோது மட்டுமே ஆர்வம் காட்டி செய்தார்கள். அதன் பிறகு பணியை கண்டு கொள்ளவில்லை. இதனால் இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் தினமும் விபத்துக்குள்ளகிறார்கள். சாலை முழுவதும் குண்டும் குழியுமாக இருக்கிறது. அந்த வழியாக தினமும் பள்ளி, கல்லூரிக்கு, வேலைக்கு செல்பவர்களுக்கு சிரமப்படுகிறார்கள். கிடப்பில் போடப்பட்ட பணியை விரைந்து முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சந்தோஷ், கழிஞ்சூர்.