வளைவில் இருந்த புதர்கள் அகற்றப்பட்டது

Update: 2022-08-18 12:36 GMT
கூத்தாநல்லூர் அருகே, வடபாதிமங்கலம் அருணாச்சலேசுவரர் கோவில் எதிரே ஆபத்தான வளைவு உள்ளது. இந்த வளைவு வாகன ஓட்டிகளுக்கு தெரியாதவகையில் சாலையோரத்தில் செடிகள் வளர்ந்து உள்ளது. இதனால் எதிர் எதிரே வரும் வாகனங்கள் தெரியாததால் அடிக்கடி விபத்து ஏற்பட்டவண்ணம் இருந்தன. இதுகுறித்த செய்தி தினத்தந்தி புகார் பெட்டியில் வெளியானது. இதன் எதிரொலியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையோரத்தில் இருந்த செடி, கொடிகளை அகற்றிவிட்டனர். உடன் நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்ட தினத்தந்தி நாளிதழுக்கும் பொதுமக்கள் நன்றியும், பாராட்டையும் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்