சென்னை கூடுவாஞ்சேரி மாடம்பாக்கம் வள்ளலார் நகர் அண்ணா தெருவில் நடந்து செல்லவே முடியாத அளவிற்கு சேறும் சகதியும் ஆக்கிரமித்துள்ளது. இந்த தெருவில் வாகனத்தில் செல்லும் போதெல்லாம் வாகனத்தின் சக்கரங்கள் மண்ணில் புதைந்து விடும் சம்பவங்கள் அடிக்கடி அரங்கேறுகிறது. இதனால் இந்த பகுதி மக்கள் பெரும் சிரமத்துக்கிடையே பயணம் மேற்கொள்கிறார்கள். எனவே சேறும் சகதியும் சேராத வன்னம் பாதையை சரி செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.