பெரம்பலூரில் விளாமுத்தூர் சாலையில் மத்திய அரசின் மனிதவள மேம்படுத்துறையின் கீழ் இயங்கும் கேந்திரிய வித்யாலயா பள்ளி உள்ளது. பெரம்பலூர் நகரில் இருந்து ரோவர் நூற்றாண்டு சிக்னல் வழியே கேந்திரிய வித்யாலயா பள்ளிக்கு தினமும் நூற்றுக்கணக்கான மாணவ-மாணவிகள் பள்ளிக்கு சென்று வருகின்றனர். பள்ளி சிறுவர், சிறுமிகளை அவர்தம் பெற்றோர் சாலை வழியே இரு சக்கர வாகனங்களில் சென்று பள்ளியில் விட்டுவருகின்றனர். பள்ளி முடிந்தவுடன் மீண்டும் அவர்களை அழைத்துக்கொண்டு வருகின்றனர். இந்த சாலையில் உள்ள 2 வளைவுகளும் மிக குறுகலா உள்ளன. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.