சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பெரியார்சிலையில் இருந்து 5 விளக்கு பகுதி வரை சாலை விரிவாக்க பணிக்காக சாலையில் ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்டது. இந்த கற்கள் சாலை முழுவதும் பரவி அந்த பகுதி முழுவதும் புழுதியை ஏற்படுத்துகிறது. இதனால் சாலையில் பயணிக்க முடியாமல் வாகனஓட்டிகள் அவதியடைகின்றனர். எனவே உடனடியாக இந்த சாலையை போட நடவடிக்கை எடுக்க வேண்டும்.