திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே, வேளுக்குடி பகுதியில் கீழபனங்காட்டாங்குடிக்கு செல்லும் பிரிவு சாலை உள்ளது. இந்த சாலை கூத்தாநல்லூர், திருவாரூர், மன்னார்குடி போன்ற பகுதிகளை இணைக்கும் முக்கிய வழித்தடமாக உள்ளது. இதனால் இந்த சாலையின் வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. கீழபனங்காட்டாங்குடி சாலைக்கு செல்வதற்காக சாலையோரத்தில் வழிகாட்டி பலகை வைக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த பலகையில் செல்லும் ஊருக்கான பெயர் இல்லை. இதனால் வெளியூர்களில் இருந்து வருவோர் வழிமாறி சென்று விடுகின்றனர். இதனால் கால விரயம் ஏற்படுவதோடு, மன உளைச்சல் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வழிகாட்டி பலகையில் ஊர் பெயர் இடம் பெற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.