திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் மேலராஜவீதி உள்ளது. இந்த பகுதியில் ஏராளமான கடைகள், நிறுவனங்கள் உள்ளன. இதனால் இந்த பகுதியில் எப்போதும் போக்குவரத்து அதிக அளவில் காணப்படும். தற்போது இந்த சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் இந்த சாலையை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. இரவு நேரங்களில் இந்த சாலையின் வழியாக செல்பவர்கள் சிறு சிறு விபத்துகளில் சிக்கி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.