ஜல்லி கற்கள் பெயர்ந்த சாலையால் வாகன ஓட்டிகள் அவதி

Update: 2022-08-03 12:02 GMT
நாகை மாவட்டம் கீழ்வேளூர் தாலுகா செருநல்லூர் மேலத்தெருவில் சாலை குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் இந்த வழியாக செல்லும் வாகனங்கள் தள்ளாடியபடி செல்கின்றன. இதே போல் தெற்குபொய்கைநல்லூர் மழைமுத்து மாரியப்பன் சாலை ஜல்லி பெயர்ந்து கிடக்கிறது. மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி காணப்படுகிறது. கற்கள் பெயர்ந்து உள்ளதால் இருசக்கர வாகனங்களில் செல்வோர் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இதனால் அந்த வழியாக செல்லும் வாகனஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து மேற்கண்ட பகுதிகளில் சேதமடைந்த சாலைகளை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்