திருச்சி மாவட்டம், லால்குடி வட்டம், டோல்கேட் அருகில் உள்ள வாளாடி முதன்மை சாலையில் அமைந்துள்ள மேம்பாலத்தின் வழியாக தினமும் அரியலூர், ஜெயங்கொண்டம், லால்குடி மற்றும் பல்வேறு ஊர்களுக்கு அதிக அளவில் கனரக வாகனங்கள் மற்றும் பஸ்கள் இந்த பாலத்தின் வழியாக சென்று வருகிறது. பாலத்தின் இருபுறமும் ஓரப்பகுதியில் அதிகளவில் மண்கள் தேங்கியும் மற்றும் புற்கள் முளைத்தும் காணப்படுகிறது. மேலும் இங்குள்ள மின்விளக்குகள் நீண்ட நாளாக சரியாக எரிவதில்லை. தேங்கியுள்ள மண்களும் காற்றில் பறப்பதால் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.