அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டம், விக்கிரமங்கலம் முதல் குருவாடி வரை உள்ள தார் சாலை மிகவும் குறுகலாக உள்ளதால் சாலையில் நான்கு சக்கர வாகனங்கள் செல்லும்போது, இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் நிலை தடுமாறி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் இரவு நேரத்தில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குறுகலாக உள்ள இந்த சாலையை அகலப்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.