காஞ்சிபுரம் மாவட்டம் சோமங்கலம் ஊராட்சியில் இருந்து சேத்துப்பட்டு செல்லும் ஊராட்சி ஒன்றிய சாலையில் ஜல்லிகற்கள் பெயர்ந்து சாலை மிகவும் மோசமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். இது குறித்து ஊராட்சி ஒன்றிய பொறியாளர்கள் கண்டு கொள்ளாமல் இருப்பதால் சாலையை சீரமைக்க ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?