மேல்மலையனூர் அருகே வடவெட்டி ஊராட்சியில் கீழ்செவளம்பாடி- பெருவளூர் செல்லும் சாலையானது பலத்த சேதமடைந்து கரடு, முரடாக காட்சி அளிக்கிறது. இதனால் இந்த சாலை வழியாக செல்லும் பொதுமக்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.