செங்கம் பேரூராட்சிக்கு உட்பட்ட ராஜவீதி தெருவில் பேரூராட்சி அலுவலகம், பள்ளிக்கூடங்கள், ஏ.டி.எம். மையங்கள் உள்ளன. இந்தச் சாலை குண்டும், குழியுமாக உள்ளது. அந்தச் சாலையை ஆக்கிரமித்து கடைகள் வைக்கப்பட்டுள்ளன. ராஜவீதி தெருவில் குண்டும், குழியுமான சாலையை சரி செய்தும், ஆக்கிரமிப்புகளை அகற்றவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-திேனஷ், செங்கம்.