விருதுநகர் மாவட்டம் சூலக்கரை ஊராட்சி மாத்தநாயக்கன்பட்டி மேற்கு காலனி தெரு பகுதியின் முக்கிய சாலையில் இருந்து தெருவிற்கு இறங்கும் பாதை மிகவும் ஆபத்தான நிலையில் உயரமாக உள்ளது. இதனால் சாலையில் வரும் வாகனஓட்டிகள் விபத்தில் சிக்குவதுடன், நிலை தடுமாறி கிழே விழுந்து கை, கால் முறிவுகள் ஏற்படுகிறது. எனவே இந்த பாதையை சமப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?