ஈரோடு வ.உ.சி பூங்கா திடலில் நேதாஜி காய்கறி மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இந்த சந்தையில் காய்கறி வாங்க தினமும் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கிறார்கள். மேலும் சிறு, குறு வியாபாரிகளும் வந்து செல்கிறார்கள். இந்த சந்தை மழைக்காலங்களில் சந்தை சேறும், சகதியுமாக மாறவிடுகிறது. இதனால் சந்தையில் பொதுமக்கள் நடமாட முடியாத நிலை உள்ளது. எனவே சந்தையில் ரோடு அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.