சாலை விரிவாக்கம் செய்யப்படுமா?

Update: 2022-12-25 13:04 GMT

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலூகா ஆக்கூர் அருகே அப்புராசபுரம்புத்தூர் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியை சேர்ந்த மக்கள் எந்த வேலையாக இருந்தாலும் ஆக்கூர் தான் செல்ல வேண்டும். ஆனால் ஆக்கூர் - அப்புராசபுரம்புத்தூர் சாலை மிகவும் குறுகியதாக போக்குவரத்துக்கு மிகவும் இடையூறாக உள்ளது. ஒரே சமயத்தில் எதிரெதிரே வாகனங்கள் வந்தால் ஒதுங்க வழியின்றி உள்ளது. இதனால் அந்த வழியாக செல்பவர்கள் மிகவும் அவதியடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்

சாலை வசதி