திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் ஒன்றியத்துக்கு உட்பட்ட சித்தாம்பூர் ஊராட்சியில் 4-வது வார்டில் பொது கழிவறை வசதி இல்லை. இதனால் சிலர் சாலையின் இருபுறத்தையும் திறந்தவெளி கழிவறையாக பயன்படுத்துகின்றனர். இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதோடு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. மேலும் அந்த சாலை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து பொதுகழிவறை அமைத்து தரவேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாகும்.