மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் பஸ் நிலையத்தில் சாலை சந்திப்பில் வழிகாட்டி பெயர் பலகை அமைக்கப்பட்டிருந்தது. அது தற்போது அகற்றப்பட்டுவிட்டது. அதனால் திருமணஞ்சேரி கோவில் மயிலாடுதுறை மற்றும் கும்பகோணம் செல்லும் வழி தெரியாமல் வாகன ஓட்டிகள் குழப்பம் அடைகின்றனர். மேலும் வழிதெரியாமல் நீண்ட தூரம் பாதை மாறி சென்று திரும்பி வரும் சூழல் உள்ளது. இதனால் அவர்கள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வழிகாட்டி பெயர் பலகை வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.