தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை கொண்டப்பநாயக்கன்பாளையம் தெருவில் எம்.ஜி.ஆர் நகர் மற்றும் மாதாகோவில் சாலை மிகவும் மோசமாக குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் குழந்தைகள் முதல் வயதானவர்கள் மற்றும் பள்ளி கல்லூரி செல்லும் மாணவர்கள் பெரும்அவதிக்குள்ளாகின்றனர். தற்பொழுது மழைக்கலாம் என்பதால் ஆங்காங்கே தேங்கி நிற்கும் மழைநீரால் வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி விபத்தில் சிக்கிவிடுகின்றனர். எனவே இது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
பொதுமக்கள், பட்டுக்கோட்டை