மயிலாடுதுறை மாவட்டம் கோமல் முதல் தேரழந்தூர் வரை உள்ள சாலையில் சிறிய பாலங்கள் கட்டப்பட்டது. இந்த பாலங்கள் கட்டும் பணி நடந்து கொண்டிருந்த போது பல்வேறு இடங்களில் சாலையில் மணலால் ஆன தற்காலிக வேகத்தடைகள் அமைக்கப்பட்டன. தற்போது பணிகள் முடிந்த பின்னரும் தற்காலிக வேகத்தடைகள் இன்னும் அகற்றப்படாமல் உள்ளன. இதனால் மழைக்காலங்களில் இந்த தற்காலிக வேகத்தடை மீது செல்லும் போது வாகன ஓட்டிகள் கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்கி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து தற்காலிக வேகத்தடைகளை அப்புறப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.