நாகை மாவட்டம் திட்டச்சேரி பகுதியில் இருந்து காரைக்கால் செல்லும் மெயின் சாலையில் ஆலங்குடிச்சேரி உள்ளது. இங்கு புதிதாக கட்டப்பட்டு வரும் மேம்பாலம் அருகே உள்ள சாலை குண்டும்,குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் மழைநீர் சாலையில் தேங்கி நிற்கிறது. மேலும், சாலை முழுவதும் சேறும்,சகதியுமாக காட்சி அளிக்கிறது. இதன்காரணமாக பொதுமக்கள் சாலையில் நடந்து செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள சாலையை சீரமைத்து தர நடவடிக்கை எடுப்பார்களா?