செங்கல்பட்டு மாவட்டம் பல்லவபுரம் ஈஸ்வரன் நகர், முதல் பிரதான சாலையில் கழிவு நீர் குழாய் பாதையை சீர் செய்யும்பொழுது பூமிக்கடியில் இருந்து சில பாறாங்கற்கல் வெளியே எடுக்கப்பட்டன. இந்த பாறாங்கற்கள் நீண்ட நாட்களாக அகற்றப்படாமல் சாலையிலேயே இருப்பதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. மாநகராட்சி உடனடியாக நடவடிக்கை எடுத்து பாறாங்கற்களை அப்புறப்படுத்துமா?