விபத்து அபாயம்

Update: 2022-07-09 11:17 GMT

குன்னூர் நகராட்சிக்கு உட்பட்ட புருக்லேண்ட்ஸ் பகுதியில் கோத்தகிரி பிரதான சாலையை இணைக்கும் கிளைச்சாலையில் 1½ கிலோ மீட்டர் தூரத்துக்கு பழுதடைந்து உள்ளது. தற்போது மழை பெய்து வருவதால், அந்த சாலை சேறும், சகதியுமாக காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். மேலும் சிலர் வலுக்கி விழுந்து காயம் அடைகின்றனர். இது தவிர பிரேக் பிடிக்காமல் வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே அந்த சாலையை உடனடியாக சீரமைக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்