திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி தாலுகா பெரிய சிங்களாந்தி பகுதியில் சாலை பராமரிப்பின்றி குண்டும்,குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் மழைக்காலங்களில் சாலையில் மழைநீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. மேலும், சாலையில் உள்ள ஜல்லிக்கற்கள் பெயர்ந்து கிடக்கிறது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் அடிக்கடி கீழே விழுந்து விபத்தில் சிக்கிக்கொள்கின்றனர். இதனால் மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்பவர்கள் சாலையில் அச்சத்துடன் பயணம் செய்து வருகின்றனர். மேலும் அந்த பகுதியில் தெருவிளக்கு வசதியும் இல்லை. எனவே, மேற்கண்ட பகுதியில் சாலையை சீரமைப்பதோடு,தெருவிளக்கு வசதி ஏற்படுத்தி தர அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?