தஞ்சை-நாகை சாலையில் வண்டிக்காரத்தெரு அருகே சாலை ஓரத்தில் தள்ளுவண்டிகளில் காய்-கறிகள் போட்டு விற்பனை செய்கிறார்கள். இதனால் சாலையின் பாதி அளவு காய்கறி வண்டிகளை நிறுத்திஇருப்பதாலும், வாங்க வரும் பொதுமக்களும் வாகனங்களை அப்படியே நிறுத்தி விடுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் அந்த வழியாக இருசக்கர வாகனங்களில் செல்வோர் நிலை தடுமாறி விழுந்து காயமடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து போக்குவரத்தை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள்,தஞ்சை