சேலம் பங்களாதெருவில் கணபதி அய்யர் வரை செல்லும் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. மேலும் ஜல்லி கற்கள் பெயர்ந்து காணப்படுவதால் வாகனங்கள் செல்லும் போதும், நடந்து செல்லும் பொதுமக்களும் கடும் சிரமப்பட்டு செல்கின்றனர். எனவே மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தார்சாலையை புதுப்பிக்க வேண்டும்.
-கணேஷ், பங்களாதெரு, சேலம்.