பெங்களூரு பழைய மெட்ராஸ் சாலையில் வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் வகையில் குழிகள் காணப்படுகின்றன. அந்த பள்ளங்களால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படும் முன்பு அந்த குழிகளை மூட மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.