பெங்களூரு மாகடி ரோடு அருகே கருமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் அருகே உள்ள சாலையில் ஜல்லி கற்கள் பெயர்ந்து கிடக்கிறது. இதனால் அந்த சாலையில் வேகமாக வரும் வாகன ஓட்டிகள் தவறி விழுந்து விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் அந்த சாலையில் கிடக்கும் ஜல்லி கற்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.