தஞ்சை-நாகை ரோடு சோழன் நகர் அருகே பாதாள சாக்கடை சீரமைக்கும் பணி ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது. இதனால் வாகனங்கள் ஒரே திசையில் எதிர்எதிரே வருவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி விடுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், தஞ்சை