கோவை அவிநாசி ரோட்டில் உப்பிலிபாளையம் சிக்னல் அருகே மேம்பாலம் உள்ளது இந்த மேம்பாலத்தின் கீழ் பகுதியில் சுரங்க பாதையில் உண்டு. உப்பிலிபாளையம் சிக்னல் பகுதியில் இருந்து மேம்பாலத்திற்கு வருபவர்கள் காந்திபுரம் செல்ல மேம்பாலத்தின் கீழ் பகுதி வழியாக சென்று வலது புறத்தில் திரும்பி செல்வதுண்டு இதில் அந்த மேம்பால தடுப்புச் சுவரில் ஆலமரக்கன்று ஒன்று வளர்ந்து வருகிறது. இதனால் தடுப்புச் சவர் எந்த நேரத்திலும் உடைந்து விடும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது எனவே விபத்துக்கள் ஏற்படுவதற்கு முன்பு இந்த ஆலமரக்கன்றை அகற்ற வேண்டும்.