புவனகிரி ஒன்றியம் மஞ்சக்கொல்லை பகுதியில் உள்ள சாலை குண்டும், குழியுமாக போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகளுக்கு இந்த சாலையை கடந்து செல்வதே பெரும் சவலாக உள்ளது. அடிக்கடி விபத்தும் நடைபெற்று வருகிறது. எனவே வாகன ஓட்டிகள் நலன் கருதி சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.