செல்லங்கோணம் அரசு நடுநிலைப்பள்ளியில் அருகில் இருந்து கருக்குப்பனை சந்திப்புக்கு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலை சேதமடைந்து தார்சாலை என்பதற்கான அறிகுறியே இல்லாத அளவில் போக்குவரத்துக்கு தகுதியற்ற நிலையில் காணப்படுகிறது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி வருகின்றனர். எனவே, வாகன ஓட்டிகள், பாதசாரிகள் நலன் கருதி சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.