கோத்தகிரி அருகே கேர்கம்பையில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிக்கு செல்லும் சாலை பழுதடைந்து கரடு, முரடாக உள்ளது. இதனால் மாணவ-மாணவிகள் சிரமத்துடன் சாலையில் நடந்து சென்று வருகின்றனர். எனவே பள்ளிக்கு செல்லும் மண் சாலையை தார்ச்சாலையாக மாற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.