கோவை கலெக்டர் அலுவலகம் அருகே நடைபாதையை பெயர்த்து கேபிள்கள் அமைக்கப்பட்டது. தற்போது இந்த பணி நிறைவடைந்த நிலையில், நடைபாதை சீரமைக்கப்படாமல் உள்ளது. இதனால் கலெக்டர் அலுவலகத்திற்கு வருபவர்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். முதியவர்கள் கால் தவறி விழுந்து காயம் அடையும் நிலை உள்ளது. எனவே அவர்களின் சிரமங்களை போக்க நடைபாதையை சீரமைக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.