உளுந்தூர்பேட்டை நகராட்சிக்கு உட்பட்ட புதுதெருவை சிலர் ஆக்கிரமித்து கடைகள் அமைத்துள்ளனர். இதனால் அங்கு அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவதோடு, விபத்துகளும் அதிகரித்து வருகிறது. இதை தவிர்க்க ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.