சாலையில் ஆபத்தான பள்ளம்

Update: 2022-08-18 12:49 GMT
மயிலாடுதுறை காமராஜர் சாலை புனுகீஸ்வரர் கோவில் கீழவீதி சந்திப்பில் பாதாள சாக்கடை குழியின் மூடி உடைந்த நிலையில் உள்ளது. இதனால் கழிவுநீர் வெளியேறி சாலையில் தேங்கி கிடந்தது. இதைத்தொடர்ந்து கழிவுநீர் வெளியேறாமல் இருக்க அந்த பகுதியில் பள்ளம் தோண்டப்பட்டு சீரமைப்பு பணி நடந்தது. ஆனால் தற்போது வரை தோண்டப்பட்ட பள்ளம் மூடப்படாமல் இருக்கிறது. இதன்காரணமாக அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள பள்ளத்தை மூட நடவடிக்கை எடுப்பார்களா?




மேலும் செய்திகள்