திருவாரூர் மாவட்டம் ஆண்டிப் பந்தல் - நன்னிலம் செல்லும் சாலையில் வேம்படி அம்மன் கோவில் அருகே சாலையில் வேகத்தடை அமைக்கப்படவில்லை. இந்த பகுதியில் பள்ளிகள், அரசு அலுவலகங்கள் மற்றும் கடைவீதிகள் இருப்பதால் எப்போதும் சாலை பரபரப்பாக காணப்படும். இந்த நிலையில் சாலையில் வேகத்தடை இல்லாமல் இருப்பதால் இருசக்கர மற்றும் கனரக வாகனங்கள் அதிவேகமாக சென்று வருகிறது. இதனால், மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்பவர்கள், பொதுமக்கள் சாலையை கடக்கும் போது அடிக்கடி விபத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, அசம்பாவிதம் எதுவும் ஏற்படும் முன்பு மேற்கண்ட பகுதியில் உள்ள சாலையில் வேகத்தடை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?